உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருதமலை முருகன் தைப்பூச தேர்த்திருவிழா துவங்கியது!

மருதமலை முருகன் தைப்பூச தேர்த்திருவிழா துவங்கியது!

https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_39317_181010762.jpgமருதமலை முருகன் தைப்பூச தேர்த்திருவிழா துவங்கியது!,https://imgtemple.dinamalar.com/kovilimages/news/TN_39317_18101851.jpgமருதமலை முருகன் தைப்பூச தேர்த்திருவிழா துவங்கியது!வடவள்ளி: கோவை மருதமலை முருகன் கோவிலின் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவையில் மிகவும் பழமையான கோவில்களில் மருதமலை முருகன் கோவிலும் ஒன்று.இங்கு ஆண்டுதோறும் தைப்பூச தேர்த்திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படும். அதேபோல், இந்த ஆண்டும் தைப்பூச தேர்த்திவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. காலை, 6:00 மணி முதல் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சுவாமி கோவிலை சுற்றி வலம் வந்தது. பின், கொடி கம்பத்தில் சிறப்பு யாக பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, பக்தர்களின் சரண கோஷத்துடன் தைப்பூச தேர்த்திருவிழா கொடி, கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்றம் முடிந்ததும், தைப்பூச விழாவை முன்னிட்டு விரதம் இருக்கும் பக்தர்கள், கையில் காப்பு கட்டி தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கடவுள் அருள் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !