மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
3876 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
3876 days ago
திருப்பதி: திருமலையில், விரைவு தரிசனத்திற்காக, 300 ரூபாய் கட்டணத்தில், முன் பதிவு செய்யப்படும் டிக்கெட்டுகள் எண்ணிக்கையை, 20 ஆயிரமாக உயர்த்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தேவஸ்தான செயல் அதிகாரி சீனிவாசராஜு கூறியதாவது: திருமலையில், ரதசப்தமி உற்சவம் சிறப்பாக நடந்தது. உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு, இலவச உணவு பொட்டலம் வழங்கப்பட்டது. அன்றைய தினம், உண்டியல் மூலம், 2.98 கோடி வருமானம் கிடைத்துள்ளது. திருமலையில், விரைவு தரிசனத்திற்காக, 300 ரூபாய் கட்டணத்தில், இணையதளத்தில் வழங்கப்பட்டு வரும், 18 ஆயிரம் டிக்கெட்களும் முன்பதிவாகி விடுகின்றன. எனவே, இந்த வசதியை அனைவரும் பயன்படுத்த ஏதுவாக, கூடுதலாக, 2,000 டிக்கெட் வழங்க முடிவு செய்துள்ளோம். இனி, 20 ஆயிரம் பேர், இரண்டு மணி நேரத்திற்குள் ஏழுமலையானை எளிதாக தரிசிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
3876 days ago
3876 days ago