உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் ரத சப்தமி விழா!

கைலாசநாதர் கோவிலில் ரத சப்தமி விழா!

நடுவீரப்பட்டு: கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று  ரதசப்தமி திருவிழா நடந்தது. அதனையெ õட்டி நேற்று காலை 7:00 மணிக்கு காமாட்சி அம்மன் சமேத  கைலாசநாதருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்து 8:00 மணிக்கு வீதி உலாவாக  சென்று   கெடிலநதிக்கரையில் தீர்த்தவாரி நடந்தது. காலை 10:00 மணிக்கு கோவிலில் 108 சங்கு ஸ்தாபனம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்து, பகல்  12:00  மணிக்கு  விநாயகர், வள்ளி தேவசேனா சுப்பரமணிய சுவாமி, தனி அம்மன், காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர், சண்டிகேஸ்வரர் ஆகிய  பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு 108 சங்கு அபிஷேகமும், அதனை தொடர்ந்து மகா அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு காமாட்சி அம்மன் சமேத  கைலாசநாதர் சுவாமிக்கு  திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை  நிர்வாக அறங்காவலர் சுவாமிநாதன் தலைமையில் விழாக்குழவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !