விருத்தாசலம் கோவில்களில் கிருத்திகை சிறப்பு வழிபாடு!
ADDED :4220 days ago
விருத்தாசலம்: கிருத்திகையொட்டி, விருத்தாசலம் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், நேற்று காலை பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உட்பட சிறப்பு பொருட்களால் அபி ஷேகம், சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கொளஞ்சியப்பர், சித்தி விநாயகர் சுவாமிகள் வெள்ளிக் கவசத்தில் அரு ள்பாலித்தனர். மாலை 6:00 மணிக்கு வெள்ளித்தேரில் உற்சவர் உட்பிரகார வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர் சுவாமி, வேடப்பர் சுவாமி கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.