கைலாசநாதர் கோவிலில் சுவாமி சிலைகள் சேதம்!
ADDED :3908 days ago
பொதட்டூர்பேட்டை: கைலாசநாதர் கோவிலில், சுவாமி சிலைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். பொதட்டூர்பேட்டை அடுத்த, பாண்டரவேடு கைலாசநாதர் கோவிலில், நேற்று இரவு, மர்ம நபர்கள் சிலர், சுவாமி சிலைகளை சேதப் படுத்தி உள்ளனர். அனுமன், நவக்கிரகங்களில் குரு மற்றும் மயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. புகாரையடுத்து, பொதட்டூர்பேட்டை போலீசார், விசாரிக்கின்றனர்.