உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பார்சுவநாதர் தீர்த்தங்கரர் கற்சிலை கண்டெடுப்பு!

பார்சுவநாதர் தீர்த்தங்கரர் கற்சிலை கண்டெடுப்பு!

வேலூர்: ஆரணி அருகே, 4 அடி உயரமுள்ள பார்சுவநாதர் தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், திருமலை கிராமத்தில், மத்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில், சமணர்கள் வழிபடும் பார்சுவநாதர் தீர்த்தங்கரர் கோவில் உள்ளது. 1,500 ஆண்டுகளுக்கு முன், மகேந்திரவர்மன் ஆட்சிக் காலத்தில், இந்த கோவில் கட்டப்பட்டதாக, வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கோவிலில், 20 லட்சம் ரூபாய் செலவில், சுற்றுச்சுவர் கட்டும் பணி துவங்கியது. இதற்காக நேற்று காலை, பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 4 அடி உயரமுள்ள பார்சுவநாதர் தீர்த்தங்கரர் கற்சிலை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிலையை அப்பகுதி மக்கள், ஆர்வமுடன் பார்த்து சென்றனர். வேலூர் சரக தொல்லியல் துறை உதவி அலுவலர் சந்திரசேகரிடம், கற்சிலை ஒப்படைக்கப்பட்டது. திருமலை கோவில் வளாகத்திலேயே அந்த சிலை வைத்து பராமரிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், அவிநாசிலிங்கம்பாளையம் அருகே, 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சுந்தரம் கூறியதாவது: பழங்கரை பொன் சோழீசுவரர் கோவில் பூசாரி சந்திரசேகர் கொடுத்த தகவல்படி, அவிநாசிலிங்கம்பாளையம், நடுத்தோட்டத்து அய்யன் கோவில் வளாகத்தில் இருந்த, கல்வெட்டுத் துண்டுகளை ஆய்வு செய்தோம். கொங்குப் பகுதியை, கி.பி., 1265 முதல் 1285 வரை, ஆட்சி செய்த வீரபாண்டியனின், 14ம் ஆட்சி ஆண்டில் நடப்பட்ட, கல்வெட்டு என, தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !