உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை சீதாராமர் கோவில் கும்பாபிஷேகம்!

கோவை சீதாராமர் கோவில் கும்பாபிஷேகம்!

பெ.நா.பாளையம் : கோவை தடாகம் ரோடு, கணுவாயில் சீதாராமர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவில், சமீபத்தில் புனரமைக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவையொட்டி, முதல் கால பூஜை, விமான கலசங்கள் நிர்மாணம், நாடி சந்தானம், சீதா ராமர், லட்சுமண, அனுமன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு, காரமடை அரங்கநாதர் கோவில் சுதர்சன பட்டர் சுவாமிகள் தலைமை வகித்தார். விழாவில், திருக்கல்யாண உற்சவம், திருவீதியுலா, அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !