உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு சிறப்பான வரவேற்பு!

மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு சிறப்பான வரவேற்பு!

புதுச்சேரி: புத்துணர்வு முகாமிற்கு சென்று திரும்பிய, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்திலுள்ள கோவில், மடங்களில் வளர்க்கப்படும் யானைகளின் உடலும், மனமும் புத்துணர்வு பெறும் வகையில், தமிழக அரசு அறநிலையத்துறை சார்பில் ஆண்டுதோறும் மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டி அருகே, பவானி ஆற்றுப்படுகையில் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2014, நவம்பர் 11-ஆம் தேதி முதல் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் 30 யானைகள் பங்கேற்றன. இதில், காரைக்கால் தர்பாரண்யேஸ்வரர் கோவில் யானை பிரக்ருதி மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகர் யானை லட்சுமியும் பங்கேற்றன. புத்தணர்வு முகாம் நிறைவு பெற்றதையடுத்து, மணக்குள கோவில் யானை லட்சுமி மற்றும் திருநள்ளார் கோவில் யானை பிரக்ருதி ஆகியன நேற்று திரும்பின.புதுச்சேரி திரும்பிய, மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமிக்கு, கடற்கரையில், கோவில் சார்பில், சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை காண்பித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து லட்சுமி யானை, கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டது.

காரைக்கால்: திருநள்ளார் பிரக்ருதி யானை, கடந்த 12ம் தேதி, 2 பாகன்களுடன் புத்துணர்வு முகாமிற்கு சென்றது. முகாம் முடிந்து, நேற்று பிரக்ருதி யானை திருநள்ளார் திரும்பியது. அந்த யானைக்கு கோவில் வளாகத்தில் இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !