மயிலம் முருகன் கோவிலில் தை கிருத்திகை விழா!
ADDED :3907 days ago
மயிலம்: மயிலம் வள்ளி, தெய்வானை சுப்பரமணியர் சுவாமி கோவிலில் தை மாத கிருத்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. காலை சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. மூலவர் தங்ககவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஒரு மணிக்கு கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் மலையடிவாரத்திலுள்ள அக்னி குளம் அருகே மொட்டையடித்து நேர்த்தி கடனை செலுத்தினர். கோவில் ராஜகோபுரம் எதிரில் பொங்கல் வைத்து சுவாமிக்கு படைத்தனர். இரவு 9 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு உற்சவர் கிரிவலம் நடந்தது. ஏற்பாடுகளை மயிலம் ஆதினம் செய்திருந்தார்.