உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அரசமங்கலம் பெருமாள் கோவிலில் பிப்.,2ம் தேதி மகா கும்பாபிஷேகம்!

அரசமங்கலம் பெருமாள் கோவிலில் பிப்.,2ம் தேதி மகா கும்பாபிஷேகம்!

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த அரசமங்கலம் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா வரும் 2ம் தேதி நடக்கிறது. விழுப்புரம் தாலுகா, அரசமங்கலம் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் ராஜ கோபுரம், பரிவார சந்நிதிகள் புனரமைக்கப்படுகிறது. மகா கும்பாபிஷேக விழா, வரும் 2ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகாலஷ்மி பூஜை நடக்கிறது. மறுநாள் (31ம் தேதி) காலை சுதர்சன ஹோமம், பெருமாள் திருமஞ்சனம், வாஸ்து ஹோமம் நடக்கிறது. பிப்.1ம் தேதி காலை புண்யாவாஹனம், திருவாதனம், மகாசாந்தி ஹோமம், பகல் 3:00 மணியளவில் பக்தி சொற்பொழிவு, இரவு 9:00 மணிக்கு சிறப்பு பஜனை நடக்கிறது. தொடர்ந்து 2ம் தேதி காலை 7:00 மணிக்கு கோ பூஜை, 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தொடர்ந்து கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 10:00 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், பெருமாள் சம்ப்ரோஷணம், சிறப்பு ஆராதனை நடக்கிறது. அன்னதானமும், மாலை 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7:00 மணிக்கு பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. அமைச்சர்கள் மோகன், வளர்மதி, சம்பத், எம்.பி.,க்கள் லட்சுமணன், ராஜேந்திரன், செஞ்சி ஏழுமலை, முன்னாள் அமைச்சர் சண்முகம் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் வெங்கடேஷ்பாபு சுவாமி உள்ளிட்ட விழா குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !