பாவ நாராயண சுவாமி கோவில் விழா
ADDED :3907 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை பாவ நாராயண சுவாமி கோவிலில் பல்லக்கு விழா நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை, பஜனைமட பாவநாராயண சுவாமி கோவிலில் பல்லக்கு விழா மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் கரகம் அலங்கரித்து வீதியுலா, நேற்று முன்தினம் அலங்கரித்த பாவ நாராயண சுவாமி நரி வாகனத்தில் வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை பத்ம சாலியர் சங்க பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.