உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லிங்க வடிவில் நவகிரகங்கள், ரிஷிகள்!

லிங்க வடிவில் நவகிரகங்கள், ரிஷிகள்!

லிங்கத் திருமேனி சிவனுக்கே உரியது என்பார்கள். ஆனால் வடநாட்டில் உள்ள சில திருத்தலங்களில், நவகிரகங்களும் ரிஷிகளும்கூட லிங்கத் திருமேனியராகக் காட்சி தருகின்றனர். வியாச காசியில் வியாசர், சுகர், வியாசேஸ்வரர் ஆகியோர் லிங்கத் திருமேனிகளாக காட்சி தருகின்றனர். உஜ்ஜயினி மகா காளேஸ்வரர். கோயிலில் நவகிரகங்களும், சப்த ரிஷிகளும் லிங்கத் திருமேனியராக அருள்கின்றனர். இங்கே சன்னிதி கொண்டிருக்கும் அருந்ததியும் லிங்க ரூபமாகக் காட்சி தருகிறாள். அமர்நாத் பெருங்குகையில் உள்ள அம்பாளும் லிங்க வடிவிலேயே அருள்பாலிக்கிறாள். மதுரை மாவட்டம் சதுரகிரியில் உள்ள ஆனந்நதவல்லி அம்மனும், இரட்டை லிங்கம் எனப்படும் சிவனும், பெருமாளும் கூட லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !