பாலசுப்ரமணியர் கோயிலில் 2ம் ஆண்டு திருவிளக்கு பூஜை
ADDED :5232 days ago
விழுப்புரம் : விழுப்புரம் ரயிலடியில் உள்ள சித்து பாலசுப்ரமணியர் கோயிலில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் வளவனூர் கிளை சார்பில் 2ம் ஆண்டு விளக்கு பூஜை நடந்தது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த வளவனூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஐயப்பா சேவா சங்க மாவட்ட செயலாளர் முருகேசன் நினைவு பரிசு வழங்கினார். கிளை தலைவர் பாவாடை, செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் பெருமாள், இணை செயலாளர் பாலு உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தை சேர்ந்த சிவராஜன் குழுவினர் சித்து பாலசுப்ரமணியர் கோயிலில் திருவிளக்கு பூஜை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், ஆறுமுகம் செய்திருந்தனர்.