உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாதவனேஸ்வரர் கோவிலில் முளைப்பாரி இடும் நிகழ்ச்சி

மாதவனேஸ்வரர் கோவிலில் முளைப்பாரி இடும் நிகழ்ச்சி

அவிநாசி : மாதவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கு, யாகசாலையில் முளைப்பாரி இடும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலின் உபகோவிலான மங்களாம்பிகை உடனுறை மாதவனேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா, வரும் 6ல் துவங்குகிறது. கோவிலருகே யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது; கும்பாபிஷேகம் வரும் 9ல் காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் நடைபெறுகிறது. முளைப்பாரி இடும் நிகழ்ச்சி இன்று காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் நடக்கிறது.செயல் அலுவலர் சரவணபவன், தக்கார் வெற்றிச்செல்வன் கூறுகையில், "வரும் 5ம் தேதி மாலை 5:00 மணிக்கு கூப்பிடு விநாயகர் கோவிலில் இருந்து முளைப்பாரி மற்றும் தீர்த்தக்குடம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட பூர்ணகும்பம் ஊர்வலம் நடைபெறும். ஊர்வலத்தின் முன் சிவகண பூத வாத்தியம், நாதஸ்வரம் இசை நிகழ்ச்சி, வான வேடிக்கை நடைபெறும். கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !