ராஜராஜேஸ்வரி சித்தர் பீடத்தில் அஷ்டலக்ஷ்மி மகா ஹோமம்!
ADDED :3902 days ago
திண்டிவனம்: ராஜராஜேஸ்வரி சித்தர் பீடத்தில் மூன்று நாட்கள் அஷ்ட லக்ஷ்மி மகா ஹோமம் நடந்தது. திண்டிவனம் அடுத்த பெலாகுப்பம் வனதுர்கா ராஜராஜேஸ்வரி சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி 3 நாட்கள் அஷ்ட லக்ஷ்மி மகா ஹோமம் நடந்தது. சித்தர் பீட குரு ஸ்ரீலஸ்ரீ ரகுராம அடிகளார் தலைமையில் அஷ்டலக்ஷ்மி மற்றும் மகாலக்ஷ்மி ஜகன் மாதா ராஜராஜேஸ்வரி விக்கிரகங்கள் மூலவர் அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் அருள்பாலித்தனர். தீக்ஷாமங்களம் பாலசுப்ரமணிய சாஸ்திரிகள் கணேச சாஸ்திரி உள்பட வேத விற்பன்னர்கள் கலந்து கொண்டு பூஜைகள் செய்தனர். ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது. பூஜை ஏற்பாடுகளை ராஜராஜேஸ்வரி சித்தர் பீடம் சார்பில் செய்திருந்தனர்.