பாலா திரிபுரசுந்தரி கோவிலில் ஸம்வத்சரா அபிஷேக விழா
புதுச்சேரி:பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், ஸம்வத்சரா அபிஷேக விழா, வரும் பிப். 2ம் தேதி துவங்குகிறது.புதுச்சேரி அடுத்த இரும்பை, குபேரன் நகரில், பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு ஸம்வத்சரா அபிஷேக விழா, வரும் பிப். 2ம் தேதியன்று காலை 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. நவகலசங்கள் ஸ்தாபனம் செய்யப்பட்டு, வேதிகார்ச்சனை, மூலமந்திர ஜெபம் ஆரம்பமாகிறது. இரண்டாம் நாளான, 3ம் தேதியன்று காலையில் கலசாபிஷேகம், நவாவரண பூஜை, துாப தீப நெய்வேத்திய உபசாரம் நடக்கிறது.அன்றைய தினம் மாலையில், பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு, புதிதாக செய்யப்பட்டுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, நவசக்தி அர்ச்சனை நடக்கிறது. இதைதொடர்ந்து, கன்னியா, தருணி, சுமங்கலி, சுவாஸினி பூஜைகளும், உற்சவர் உள்புறப்பாடும் நடக்கிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை, ஆலய ஸ்தாபகர் கணேஷ் சிவாச்சாரியார் தலைமையில் பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.