ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா
ADDED :3901 days ago
உடுமலை : உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் வரும் பிப்., 2ல் நடக்கிறது. இதற்கான விழா, இன்று துவங்குகிறது. உடுமலை, தில்லை நகரில் அமைந்துள்ளது ரத்தினாம்பிகை உடனமர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில். கோவில் கும்பாபிேஷக விழா, இன்று பிற்பகல், 3:00 மணிக்கு ஊர் பொதுமக்கள் தீர்த்தகலசங்கள் மற்றும் முளைப்பாலிகை எடுத்து வருதலுடன் துவங்குகிறது. மாலை, 5:30 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, திருமகள் வழிபாடு, நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, வேள்வி நிறைவு, பேரொளி வழிபாடு நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு, ஐயப்பசுவாமி பக்தர்களின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடக்கிறது.