நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வர கோவிலில் கலசாபிஷேகம்!
ADDED :4212 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வர கோவிலில் நேற்று தை மூன்றாவது வெள்ளிக்கிழமையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு பின் விநாயகர், வள்ளி தெய் வானை முருகன், சண்டிகேஸ்வரர், நவநாயகர் வாமிகளுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. துர்கையம்மனுக்கு ராகு காலத்தில் சிறப்பு அபிஷேகம் செய்தனர். சர்வ அலங்காரத்திற்கு பின் சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் எலுமிச்சை பழம் தீபம் ஏற்றி வழிபட்டனர்.