உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்கரத்தாழ்வார் கோவிலில் அரசு வேம்பு திருக்கல்யாணம்!

சக்கரத்தாழ்வார் கோவிலில் அரசு வேம்பு திருக்கல்யாணம்!

கடலூர்: கடலூர் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் சக்கரத்தாழ்வார் கோவிலில் அரசு  வேம்பு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி நேற்று  காலை 6:00 மணிக்கு நித்யபடி ஆராதனம், 7:00 மணிக்கு புண்யாஹவசனம், கலச ஆவாஹனம், 7:30 மணிக்கு உபயதாரர்கள் சங்கல்பம் நடந்தது.  தொடர்ந்து ஹோமம், அரசு  வேம்பு மரத்திற்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. மூலவர் சக்கரத்தாழ்வாருக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்கள்  திரளாக பங்கேற்றனர். திருமணமாகாத பக்தர்கள் திருமணம் வேண்டி குண்டு மஞ்சளில் தாலி சரடு கட்டினர். குழந்தை இல்லாத தம்பதிகள் குழந்தை  வேண்டி தொட்டில் கட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !