உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் மகா தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

மதுரை; திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் இன்று (டிச.,13) நீதிமன்ற நிபந்தனைகள் படி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றக் கிளை டிச., 1ல் உத்தரவிட்டது. இதை கோவில் நிர்வாகம் நிறைவேற்றவில்லை. உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டார். 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அரசியல் விமர்சனம் கூடாது. கோஷம் எழுப்பக்கூடாது. மந்திரம் மட்டுமே உச்சரிக்க வேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி நிபந்தனை விதித்து இருந்தார். அதன்படி உள்ளூர் மக்கள் இன்று (டிச.,13) காலை 9 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  உண்ணாவிரத போராட்டத்தில் திருப்பரங்குன்றம் பகுதி நகர ரஜினி ரசிகர் மன்றத்தை சார்ந்தவர்களும் ஆதரவாக பேனர் வைத்து  உண்ணாவிரத்தில் பங்கேற்றுள்ளனர்.  _ நமது நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !