உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பு விழா

பழநி பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பு விழா

உடுமலை: பழநி பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பு விழா, உடுமலையில் நடந்தது. உடுமலை போலீசார், ஊர்க்காவல்படை, பழனியாண்டவர் பக்தர் பேரவை சார்பில், பழநி ரோட்டில் உள்ள ரோட்டரி பள்ளி அருகில், பழநி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பிஸ்கெட், உணவு பொட்டலங்கள், டீ, காபி, தண்ணீர் பாக்கெட்கள், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. இத்துடன் பக்தர்களுக்கு ஒளிரும் சிகப்பு ஸ்டிக்கர் வழங்கப்பட்டு, பாதயாத்திரை செல்லும் போது, வழியில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. உடுமலை மோட்டார் வாகன ஆய்வாளர் முருகானந்தம், பழனியாண்டவர் பக்தர் பேரவைத் தலைவர் கண்ணன், உடுமலை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தமிழ்மணி, டாக்டர் அசோக், ஊர்காவல்படை மண்டல அதிகாரி பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !