கண்டாச்சிபுரத்தில் தேர்த் திருவிழா!
                              ADDED :3922 days ago 
                            
                          
                           கண்டாச்சிபுரம் : கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நடந்த தேர்த் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத் திருவிழாவையொட்டி 9ம் நாள் நிகழ்ச்சியாக நேற்று தேர்த் திருவிழா நடந்தது. முன்னதாக காலை ராமநாதீஸ்வரர், வினாயகர், முருகன் வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பின்னர், பிற்பகல் 2:00 மணியளவில் கோவில் தேரோட்டம் துவங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தேர் வடம்பிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா ரவிச்சந்திரன் செய்திருந்தார்.