உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேப்ளாநத்தம் கோவில் கும்பாபிஷேக விழா!

சேப்ளாநத்தம் கோவில் கும்பாபிஷேக விழா!

மந்தாரக்குப்பம் அடுத்த சேப்ளாநத்தம் உத்திராபதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.கும் பா பி ஷே கத்தை முன்னிட்டு 31ம் தேதி காலை 8:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கணபதிஹோமம், மாலை 6:00 மணிக்கு முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம்காலை 2ம் கால பூஜை, விசேஷ திரவிய ஹோமம், தீபாராதனை, மாலை 3ம்கால பூஜை, தீபாராதனைநடந்தது.

கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 5:00 மணிக்கு 4ம் காலபூஜை, விசேஷ திரவிய
ஹோமம், கோ பூஜை நடந்தது. காலை 9:00 முதல் 10:30 மணிக்குள் விமான கலசத்தில் புனித நீர்ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம்செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !