காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்!
ADDED :4055 days ago
கடலூர் வில்வராயநத்தம் சண்முகம் தெருவில் உள்ள காளியம்மன் கோவிலில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடலூர் வில்வராயநத்தம் சண்முகம் தெருவில்உள்ள காளியம்மன் கோவிலில் திருப்பணி செய்துகும்மாபிஷேகம் செய்வதென முடிவு செய்யப்பட்டது. அதை முன்னிட்டுகடந்த 1ம் தேதி விநாயகர்பூஜை, சங்கல்பம், கணபதிஹோமம், நவகிரகஹோமம், லட்சுமிஹோமம் , பூர்ணாஹூதி,தீபாராதனை நடந்தது.
மதியம் புதிய சிலைகளுக்கு கரிகோலம் நடந்தது. மாலை 4:00 மணிக்குவாஸ்து சாந்தி, மருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம், ரக்ஷா பந்தனம்,தீபாராதனை நடந்தது.நேற்று 2ம் தேதி காலைவிநாயகர் பூஜை நாடி சந்தானம், தத்வார்ச்சனை, கடம்புறப்பாடு நடந்து காலை10:00 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.