உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தொள்ளமூரில் கும்பாபிஷேகம்!

தொள்ளமூரில் கும்பாபிஷேகம்!

வானூர் : தொள்ளமூர் கிராம முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.

வானூர் அடுத்த தொள்ளமூர் கிராமத்தில் உள்ள வரசித்த விநாயகர், முத்துமாரியம்மன், நவகிரக மூர்த்தி சாமிகளுக்கு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 30ம் தேதி கணபதி பூஜையும், கணபதி ஹோமமும், 31ம் தேதி தீர்த்த பூஜை, புற்றுமண் எடுத்து வருதல், முதற்கால பூஜையும் தீபாராதனையும் நடந்தது.நேற்று முன்தினம் இரண்டாம் கால பூஜையும், நேற்று காலை 9.00 முதல் 10.00 மணிக்குள் கலசங்கள் புறப்பாடும், வரசித்த விநாயகர், முத்துமாரியம்மன், நவகிரக மூர்த்தி சாமிகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் கண்ணன், ஊராட்சி தலைவர் குமார் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !