உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனத்தில் தைப்பூச விழா!

திண்டிவனத்தில் தைப்பூச விழா!

திண்டிவனம்: திண்டிவனம் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில், திண்டிவனம் மரகதாம்பிகை சமேத திந்திரிணீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, வள்ளலார் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, காலை அகவல் பாராயணம் நடந்தது. நன்பகல் ஒரு மணிக்கு மகா தீபாராதனை, அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை திண்டிவனம் சமரச சுத்த சன்மார்க்க சங்க செயலர் நாகரத்தின சக்திவேல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !