உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூரில் தைப்பூச விழா!

திருக்கோவிலூரில் தைப்பூச விழா!

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பாலசுப்ரமணியர் கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திருக்கோவிலூர், ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் நேற்று தைப்பூச விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமணியருக்கு மகா அபிஷேகம் நடந்தது. 8:30 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு தீபாராதனை, அர்ச்சனை நடந்தது. பூஜைக்கான ஏற்பாடுகளை ராஜா குருக்கள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !