முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா!
ADDED :4088 days ago
மயிலம்: மயிலம் முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தன. காலை 10.30 மணிக்கு அக்னி குளக்கரையிலுள்ள சுந்தர விநாயகர் கோவிலில் காவடிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் பால்குடம், காவடிகளை எடுத்து மலைக் கோவிலுக்கு சென்றனர். காலை 11.40 மணிக்கு மூலவருக்கு பால் அபிஷேகம் செய்தனர். சுவாமி தங்க கவச சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 12 மணிக்கு காவடிகளுடன் பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் தீமித்தனர். பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்படபத்தில் அன்னதானம் வழங்கினர். மாலை 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.