கள்ளக்குறிச்சி தைப்பூசத் திருவிழா!
ADDED :4082 days ago
கள்ளக்குறிச்சி: வீரசோழபுரம் முருகன் கோவில் தைப்பூச விழாவில் 108 பால்குடம் அபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள கல்யாண சுப்ரமணியர் கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா நடந்தது. காலை 9.30 மணியளவில் கோவிலிலிருந்து 108 பால்குடம், காவடி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது. சுப்ரமணியர் சுவாமிக்கு 108 பால்குடம் அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. முருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது.