உவரி சுயம்புலிங்க சுவாமிகோயிலில் தேரோட்டம் !
ADDED :4093 days ago
திருநெல்வேலி:உவரி சுயம்புலிங்கசுவாமி கோயிலில் தேரோட்டம் நேற்று விமரிசையாக நடந்தது.நெல்லை மாவட்டத்தின் கடற்கரை கிராமம் உவரி. இங்குள்ள சுயம்புலிங்க சுவாமி பிரசித்திபெற்றது. சுவாமி லிங்கவடிவில் சுயம்புவாக எழுந்தருளி உள்ளார். தைப்பூசத் திருவிழா கடந்த 26ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ரத வீதிகளில் கொடிபட்ட ஊர்வலம் நடந்தது.
திருவிழா நாட்களில் தினசரி காலையில் விநாயகர் வீதி உலாவும், இரவு சுவாமி சந்திரசேகரர் மனோன்மணி அம்பிகை ஆகியோர் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர். தைப்பூச தேரோட்டம் நேற்று காலையில் நடந்தது. முதலில் விநாயகர் தேரையும், தொடர்ந்து சுவாமி,அம்பாள் தேரையும் தேரை வடம்பிடித்து இழுத்தனர். இன்று 4-ந்தேதி இரவு தெப்ப திருவிழா நடக்கிறது.