உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் தைப்பூச விழாஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

திருச்செந்தூரில் தைப்பூச விழாஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தைப்பூச விழா நடந்தது. இதில் தென் மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் நடை பயணமாக, வேல் அலகு குத்தியும், அலங்கரிக்கப்பட்ட தேரை முதுகில் அலகு குத்தியும், இழுத்து வந்தனர். அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.3.30 க்கு விஸ்வரூப தீபாரணை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 4.30 க்கு தீபாரதணை நடந்தது.காலை 7.00 க்கு காலசந்தி பூஜை நடந்தது.அஸ்திரதேவர் கடலில் புனித தீர்த்தமாடும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து பக்தர்கள் கடலில் பனித தீர்த்தமாடினர்.

காலை 10 க்கு உச்சிக்கால அபிஷேகமும், 12 மணிக்கு தீபாரதணை நடந்தது. அதன் பின் தங்க சப்பரத்தில் அலைவாய்< உகந்த பெருமான் தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் மாலை 6.30 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி எட்டு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின் இரவு 8.30 மணிக்கு கோயில் வந்து சேர்ந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !