உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகராஜாகோயில் தை திருவிழா தேரோட்டம்!

நாகராஜாகோயில் தை திருவிழா தேரோட்டம்!

நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தை பெருந்திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

எந்த கோயில்களில் சென்றாலும் நாகருக்காக சன்னிதி இருக்கும். அல்லது கோயிலில் உள்ள மரங்களின் அடியிலாவது நாகர் சிலைகள் இருக்கும். ஆனால் நாகரை மூவராக கொண்டு அமைந்துள்ளது நாகர்கோவில் நாகராஜா கோயில். இங்கு அனந்தகிருஷ்ணனுக்கும் கோயில் உள்ளது. இங்கு நாகருக்கு பால் ஊற்றி வழிபாடு நடத்தினால் திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பெண் பக்தர்கள் நம்பிக்கை.

திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த பழமையான இந்த கோயிலில் தை பெருந்திருவிழா கடந்த 26-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வடம் படித்து தேர் இழுத்தனர். இதையொட்டி நேற்று மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !