அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த பிரம்மோற்சவம்: பந்தக்கால் நடும் விழா
ADDED :166 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் முகூர்த்தத்தை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தொடர்ந்து, 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவ விழா நடக்கும். அதன்படி இன்று சித்திரை வசந்த உற்சவம், பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோவில், 3ம் பிரகாரத்திலுள்ள சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. விழாவை முன்னிட்டு தினமும் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடக்கும். இரவில் சுவாமிக்கு மண்டபடி நடக்கும். விழாவின் நிறைவாக, 10 நாள் ஐயங்குளத்தில் தீர்த்தவாரியும் நடக்கும்.