தாண்டிக்குடி தைப்பூச விழா!
ADDED :4265 days ago
தாண்டிக்குடி : தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து பால், பன்னீர், இளநீர் காவடிகள், திருத்தலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தம் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த நிலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பண்ணைக்காடு சுப்ரமண்ய சுவாமி கோயிலிலும் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.