திருப்புவனத்தில் ஜெயேந்திரர்!
ADDED :4260 days ago
திருப்புவனம் : மழவராயனேந்தலில் நூறுஆண்டுகளை கடந்த கிருஷ்ணர் கோயில் உள்ளது. இங்கு பிப்.2ல் கும்பாபி ஷேகம் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு ஜெயேந்திரர் வருகை தந்தார். அவருக்கு ராமு சாஸ்திரிகள் தலைமையில் கிராமத்தினர் பூர்ண கும்ப மரியாதை அளித்தனர். அழகர்,பேச்சியம்மாள், பதினெட்டாம்படி சுவாமிகளை தரிசித்தார். பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். ஐ.ஏ.எஸ்.,(ஓய்வு) மலைச்சாமி, வங்கி கடன் தீர்ப்பாய நீதிபதி ரவீந்திரபோஸ், ஊராட்சி தலைவர்கள் கீதாதேவி, சங்கர் பங்கேற்றனர்.