உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையப்பர் கோயிலில் தெப்பத்திருவிழா விமரிசை!

நெல்லையப்பர் கோயிலில் தெப்பத்திருவிழா விமரிசை!

திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் தெப்பத்திருவிழா கோலாகலமாக நடந்தது.நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூச விழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

கோயிலில் தலப்புராணம் உருவாக காரணமான, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் கடந்த 28ல் நடந்தது. தொடர்ந்து தைப்பூச தீர்த்தவாரி விழா கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சிந்துபூந்துறை மண்டபத்தில் நடந்தது. தைப்பூச திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பத்தில் நடந்தது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெளித்தெப்பத்தில் சுவாமி,அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தெப்பத்தில் வலம் வந்தனர். ஏழு முறை தெப்பத்தை வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் இதனை கண்டுகளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !