உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் காளி கோவிலில் திருவிளக்கு பூஜை!

காரைக்கால் காளி கோவிலில் திருவிளக்கு பூஜை!

காரைக்கால்: அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில், திருவிளக்கு பூஜை மற்றும் ஏக தின லட்சார்ச்சனை நடந்தது.

காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு, அம்மனை தரிசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். செவ்வாய்கிழமை இரவு பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்ற, இரவு கோவிலில் தங்கி வழிபடுவர்.

இந்நிலையில் தை கடைவெள்ளியை முன்னிட்டு நேற்று திருவிளக்குபூஜை மற்றும் ஏக தின
லட்சார்ச்சனை விழா நடந்தது. ஆயிரக்கணக்கில் பெண்கள் பங்கேற்று, விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !