உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரம்மதீர்த்த தெப்பத்திருவிழா!

பிரம்மதீர்த்த தெப்பத்திருவிழா!

திருவேடகம்:திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பிரம்மதீர்த்த தெப்பத்திருவிழா நடந்தது. இக்கோயிலில் நேற்று காலை 10 மணிக்கு ஏலவார்குழலியம்மன், ஏடகநாதரசுவாமிக்கு பல்வேறு அபிஷேக, தீபாராதனை நடந்தது. பூச்சப்பரத்தில் புறப்பட்டு கருப்பணசுவாமி கோயிலில் பூஜை, ரதவீதி சுற்றி பிரம்மதீர்த்த தெப்பத்தில் அம்மனும், சுவாமியும்எழுந்தருளினர். இரவு மின்அலங்காரத்தில் தெப்பக்கரையில் எழுந்தருளினர்.

எதிர்சேவை நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் மணிபெரியசாமி, கூட்டுறவு சங்க தலைவர்கள் ராமு, சரவணன், மற்றும் ராஜா பெரிகருப்பன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை விழாக்குழு
நடராஜன், ஆதிராமன், மோகன், தேவகுமார், நிர்வாக அதிகாரி சுமதி செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !