சேலத்தில் தன்வந்திரி பகவான் மஹா ஹோமம்!
ADDED :4090 days ago
சேலம் : சேலம் மரவனேரி, தேசிய சேவா சமிதி வளாகத்தில், நேற்று நடந்த தன்வந்திரி பகவான் ஹோமத்தில், பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
சேலம், மரவனேரி தேசிய சேவா சமிதி வளாகத்தில், நேற்று நடந்த தன்வந்திரி பகவான் ஹோமத்தில், லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவியருக்கு பேனா, நோட்டு ஆகியவை வழங்கப்பட்டது.தொடர்ந்து, கோமாதா பூஜை, லட்சுமி நரசிம்ம ஹோமம், லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம், சுக்த புருஷ சுக்த ஹோமம், சுதர்ஸன ஹோமம், ஆயுள் அபிவிருத்தி ஹோமம், லட்சுமி, தன்வந்திரி ஹோமம் ஆகியவை நடந்தது.இதில், பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.