உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் திருச்சபை நன்னீராட்டு விழா!

வள்ளலார் திருச்சபை நன்னீராட்டு விழா!

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த சித்தலம்பட்டு கிராமத் தில், புதிதாக அமைக்கப் பட்டுள்ள, வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் திருச்சபை திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.

விழாவையொட்டி, காலை 7:30 மணிக்கு சன்மார்க்க கொடி கட்டுதலும், இதைதொடர்ந்து, திருக்குட நன்னீராட்டு விழாவும் நடந்தது. விழாவில், மணக்குள விநாயகர் கல்வி நிறுவன துணைத் தலைவர் சுகுமாறன், காங்., கமிட்டி உறுப்பினர் முத்தழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, தினமும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !