உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வ.பெரியக்குப்பத்தில் மகா கும்பாபிஷேகம்!

வ.பெரியக்குப்பத்தில் மகா கும்பாபிஷேகம்!

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா வ.பெரியக்குப்பம் கிராமத்தில் உள்ள வினை தீர்க்கும் ராம பக்த ஆஞ்சநேய சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா வ.பெரியக்குப்பம் கிராமத்தில் 17 அடி உயரமுள்ள வினை தீர்க்கும் ஸ்ரீராம பக்த ஆஞ்சநேய சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தது.

முன்னதாக கடந்த 7ம் தேதி மாலை எஜமானார் சங்கல்பம், அங்குரார்பணம், வாஸ்து சாந்தி, பஞ்சகவ்ய ப்ரோஷணம், பூர்ணாஹூதியும் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை, விஸ்வரூபம், மூலமந்திரஹோமம், விசேஷ திரவிய ஹோமம், மஹா பூர்ணாஹூதி நடந்தது. காலை 10.15 மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !