திடீர் கோயிலான வேப்பமரம்!
ADDED :3991 days ago
பரமக்குடி:பரமக்குடி பாரதிநகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வேப்ப மரத்தில் இருந்து வெண்மை நிறத்தில் பால் வழிந்தது. இதைகண்ட பொதுமக்கள்,சிறிது நேரத்தில் வேப்ப மரம் இருந்த இடத்தை சுத்தம் செய்து, கோயிலாக மாற்றி வழிபடத் துவங்கினர். இதனால் ஏற்பட்ட கூட்டத்தை போக்குவரத்து போலீசார் கட்டுப்படுத்தினர். டவுன் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.