மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிப்.,17 ல் சிவராத்திரி பூஜைகள்!
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு (பிப்.,17) அம்மன், சுவாமிக்கு விடிய, விடிய சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோயில் இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: சிவராத்திரியை முன்னிட்டு பிப்.,17 இரவு முதல் பிப்.,18 அதிகாலை வரை அம்மன், சுவாமிக்கு விடிய, விடிய அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. எனவே பொதுமக்கள், பக்தர்கள் அபிஷேகப் பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள்பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர பொருட்களை பிப்.,17 மாலைக்குள் கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம் என தெரிவித்துள்ளார்.
அபிஷேக காலம் அம்மன் சன்னதி சுவாமி சன்னதி
1ம் காலம் இரவு 10 முதல் 10.40 இரவு 11 முதல் 11.45
2ம் காலம் இரவு 11 முதல் 11.40 இரவு 12 முதல் 12.45
3ம் காலம் இரவு 12 முதல் 12.40 இரவு 01 முதல் 01.45
4ம் காலம் இரவு 01 முதல் 01.40 இரவு 02 முதல் 02.45,
இரவு 3 மணிக்கு அர்த்த ஜாமம், அதிகாலை 4 மணிக்கு பள்ளியறை, அதிகாலை 5 மணிக்கு திருவனந்தல் நடக்கும்.