நரசிங்கபுரம் கோவிலில் சுவாதி திருமஞ்சனம்!
ADDED :4087 days ago
நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில், சுவாதி திருநாளான நேற்று, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பேரம்பாக்கம் அடுத்துள்ளது, நரசிங்கபுரத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில். செவ்வாய் மற்றும் நாகதோஷ பரிகாரத் தலமாக விளங்கும் இங்கு, மாதந்தோறும் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதியன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று காலை, 10:30 மணி முதல் 11:30 மணி வரை, மூலவர் நரசிம்ம பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது.