எதிர்ப்புகள் மறைய!
ADDED :3915 days ago
விகஸ்வர நக ஸ்வருக்ஷத
ஹிரண்ய வக்ஷஸ்ஸ்த்தலீ
நிரர்க்கள விநிர்க்களத்ருதிர
ஸிந்து ஸந்த்யாயிதா;
அவந்து மதநாஸிகா மநுஜ
பஞ்ச வக்த்ரஸ்ய மாம்
அஹம்ப்ரதமிகா மித:
ப்ரகடிதாஹவா பாஹவ:
ஸ்ரீ காமாஸிகாஷ்டகம்
வஜ்ஜிராயுதம் போன்ற வலிமையான கூரிய நகங்களில் இருந்து பெருகுகின்றது ஹிரண்யனின் குருதி. அதனால் மாலைப்பொழுதை நினைவு படுத்துகிறது. நரசிம்மனின் காட்சி சத்ருக்களை அழிப்பதிலும். அடியார்களை காப்பதிலும் உத்வேகமுள்ள அக்கரங்கள் என்னைக் காக்கட்டும். சுவாதி நட்சத்திர தினங்கள், பிரதோஷம் மற்றும் தினசரி அந்தி வேளையில் குறைந்தது 9 முறை இதைச் சொல்லி வழிபடுவது மிகச் சிறந்த பலனைத் தரும்.