பிறகரையில் பெரிய அந்தோணியார் திருவிழா!
ADDED :4048 days ago
தாடிக்கொம்பு : தாடிக்கொம்பு அருகே பிறகரையில் பெரிய அந்தோணியார் திருவிழா நடந்தது. பிப்., 13 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பிப்., 14 காலை திருப்பலி, சிறப்பு அழைப்பாளர்களுக்கு மரியதை செலுத்துதலை தொடர்ந்து, இரவு அலங்கார தேர்பவனி நடந்தது. நேற்று பகல்தேர் பவனியுடன் விழா நிறைவடைந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
* கொடைக்கானல் அந்தோணியார் கோயில் திருவிழா கடந்த 3 ந்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.பிப்.14ல் திருப்பலியும், மின் அலங்கார தேர்ப்பவனி நடந்தது. அணைத்து மதத்தவர்களும் கலந்து கொண்டனர். நேற்று பகல் தேர்ப்பவனியும், நன்றி திருப்பலியும் நடந்தது. இதில் பங்கு தந்தை ஜோசப் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.