உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈஷா யோகா மையம் சார்பில் சிவராத்திரி விழா

ஈஷா யோகா மையம் சார்பில் சிவராத்திரி விழா

ராசிபுரம்: மாசி சிவராத்திரியை முன்னிட்டு, ஈஷா யோகா மையம் சார்பில், நாளை (பிப்.,17), சிவராத்திரி விழா, ராசிபுரம் பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை முன்னிட்டு, கோவை ஈஷா யோகா மையம் சார்பில், ராசிபுரத்தில் சிவராத்திரி தியானம் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு, நாளை (பிப்.,17), ராசிபுரம் பூவாயம்மாள் திருமண மண்டபத்தில் நடக்கிறது.அன்றைய தினம், மாலை, 6 மணிக்கு துவங்கி, அடுத்த நாள் காலை, 6 மணி வரை, விழா நடக்கிறது. இதில், கோவை ஈஷா யோகா மையத்தில், சத்குருவின் அருள் உரை, இங்கு காணொலி காட்சி மூலம் ஒளிபரப்படும். மேலும், கேள்வி பதில், இசை நிகழ்ச்சிகள், தியானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்நது, அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !