தேர்வில் வெற்றி பெற சிறப்பு வழிபாடு!
ADDED :3988 days ago
வேளச்சேரி: பொதுத்தேர்வில் மாணவர்கள் வெற்றி பெற வேண்டி, வேளச்சேரி தண்டீசுவரர் கோவிலில், சரஸ்வதி தேவிக்கு, சிறப்பு வழிபாடு நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதை முன்னிட்டு, நேற்று காலை, சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டன. மாலை, சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. அதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.