உலக நன்மை வேண்டி கலச விளக்கு பூஜைகள்
ADDED :3928 days ago
விழுப்புரம்: விழுப்புரம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் உலக நன்மை வேண்டி கலச விளக்கு பூஜை நடந்தது.விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், உலக ஒற்றுமை மற்றும் மழை வேண்டி கலச விளக்கு பூஜை நடந்தது. ஆதிபராக்தி ஆன்மீக இயக்க மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். முன்னாள் அரசு வழக்கறிஞர் சுப்ரமணியன் ஆன்மீக ஜோதி ஏற்றினர். ஆறுமுகம், பழனிசாமி, செயலாளர் பரத்குமார், தணிக்கை குழு ரத்தினசாமி, பொருளாளர் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்ட வேள்வி குழு மற்றும் சக்திபீட பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.