உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்த சுவாமி கோவிலில் 23ல் மாசி கொடியேற்றம்

கந்த சுவாமி கோவிலில் 23ல் மாசி கொடியேற்றம்

திருப்போரூர்: திருப்போரூரில், புகழ்பெற்ற கந்த சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் மாசி மாதம் பிரம்மோற்சவ பெருவிழா நடத்தப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு வரும், 23ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து சுவாமி கிளி வாகனம், தொட்டி, பூத வாகனம், புருஷா மிருகம், வெள்ளி அன்னம், ஆட்டுக்கடா, வெள்ளி மயில், தங்க மயில், யானை, குதிரை, சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் காலை, மாலை வேளைகளில் எழுந்தருளி, வீதி உலா வரவுள்ளார். பிரதான தேர் உற்சவம், மார்ச் 1ம் தேதி காலை, 8:00 மணிக்கு துவங்கி நடைபெறுகிறது. 4ம் தேதி, மாசி மகா தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. 6ம் தேதி, வேடர்புரி உற்சவத்தை தொடர்ந்து, திருக்கல்யாண வைபவத்துடன் பெருவிழா நிறைவடைகிறது. விழாவையொட்டி, திரு ப்போரூருக்கு, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !